மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் முகமது ஷமி மீது வழக்குபதிவு

shami
Last Updated: வெள்ளி, 9 மார்ச் 2018 (19:07 IST)
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மீது அவரது மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
 
சமீபத்தில் முகமது ஷமியின் மனைவி ஹஸின் ஜஹான், தனது கணவர் கொடூரமானவர். அவர் பல பெண்களுடன் உறவு வைத்துள்ளார். ஷமி மற்றும் அவரது குடும்பத்தினர் இரண்டு வருடங்களுக்கு மேலாக தன்னை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்தி வருகிறார்கள். எனது குடும்பம் மற்றும் மகள் காரணமாக என்னை நானே சமாதானப்படுத்த முயன்றேன். ஆனால் ஷமி பல பெண்களுடன் பேசி வருவதை தெரிந்தபோது சகித்துக்கொள்ள முடியாமல் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க முடிவு செய்தேன் என்றார்.
 
இந்நிலையில் நேற்று ஷமியின் மனைவி கொல்கத்தா காவல்துறை குற்றப்பிரிவு இணை அதிகாரி பிரவின் திருப்பதியைச் சந்தித்து ஷமி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :