1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 20 மே 2022 (17:01 IST)

தோனியின் கடைசி ஐபிஎல் போட்டியா? இணையத்தில் ரசிகர்கள் ட்ரண்ட் ஆக்கும் ஹேஷ்டேக்!

நடப்பு ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் தொடங்கி சிறப்பாக நடந்து வரும் நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறது.

அணியின் முந்தைய கேப்டன் தோனிக்கு பதிலாக இந்த முறை கேப்டனாக ஜடேஜா நியமிக்கப்பட்டார். ஆனால் ஜடேஜா கேப்டன் ஆனது முதலாக அணி தோல்வியை சந்தித்ததால் அவர் கேப்டன் பதவியில் இருந்து விலகி தோனி மீண்டும் கேப்டனானார்.

ஆனால் அவராலும் சி எஸ் கே அணியை ப்ளே ஆஃப்க்கு அழைத்து செல்ல முடியவில்லை. இந்நிலையில் இன்று சென்னை அணி தங்கள் கடைசி ஐபிஎல் போட்டியில் விளையாடுகிறது. இந்த போட்டியோடு தோனி ஓய்வு பெற்றுவிடுவார் என்று சில கருத்துகள் எழுந்துள்ளன. இதே போன்று 2019 ஆம் ஆண்டு தோனியின் ஒய்வு குறித்து கேட்கப்பட்ட போது “Definitely not” என பதில் சொல்லி இருந்தார். இந்நிலையில் இன்றும் அவர் அதே பதிலை சொல்லி அடுத்த ஆண்டும் விளையாட வேண்டும் என்பதற்காக #Definitelynot என்ற ஹேஷ்டேக்கை ரசிகர்கள் உருவாக்கி ட்ரண்ட் செய்து வருகின்றனர்.