வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐ‌பிஎ‌ல்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 20 மே 2022 (12:12 IST)

IPL 2022 - நரேந்திர மோடி மைதானத்தில் நடக்கும் இறுதி போட்டியில் திடீர் மாற்றம்!

ஐபிஎல் 2022-ன் இறுதிப் போட்டி போட்டியின் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2022 இந்த சீசனில் இன்னும் எட்டு ஆட்டங்கள் மட்டுமே எஞ்சியுள்ளது. இந்நிலையில் ஐபிஎல் 2022-ன் இறுதிப் போட்டி மே 29 அன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியின் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஆம், வழக்கமாக இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்தப் போட்டியை 8 மணிக்கு பிசிசிஐ மாற்றியுள்ளது. இறுதிப் போட்டிக்கு முன்னதாக சுமார் 6.30 மணியளவில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், இசையமைப்பாள ஏ.ஆர். ரஹ்மான் கலந்து கொள்ளும் பிரமாண்ட இசை நிகழ்ச்சி நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
இதனால் சுமார் 45 நிமிடங்கள் நடக்கும் இந்த கலை நிகழ்ச்சிகள் எல்லாம் முடிந்த பின்னர் 7.30 மணிக்கு டாஸ் போடப்பட்டு அரை மணிநேரத்திற்குப் பிறகு 8 மணிக்கு இறுதிப் போட்டி துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிமுக அணிகளான குஜராத் மற்றும் லக்னோ முதல் இரண்டு இடங்களைப் பிடித்து பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிப் பெற்றுள்ளது.
 
பிளே ஆஃப்கள் மற்றும் இறுதி அட்டவணை விவரம்:
மே 24: குவாலிஃபையர் 1 - ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா இரவு 7.30 மணிக்கு
மே 26: எலிமினேட்டர் - ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா இரவு 7.30 மணிக்கு
மே 27: குவாலிபையர் 2 - நரேந்திர மோடி ஸ்டேடியம், அகமதாபாத் இரவு 7.30 மணிக்கு
மே 29: இறுதி போட்டி - நரேந்திர மோடி ஸ்டேடியம், அகமதாபாத் இரவு 7.30 மணிக்கு
மே 29: இறுதி போட்டி நிறைவு விழா - மாலை 6.30 முதல் இரவு 7.20 வரை