வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 20 மே 2022 (11:47 IST)

ஒரே மேட்ச்சில் இரண்டு சாதனைகள்.. விளாசிய விராட் கோலி!

Virat Kohli
நேற்றைய ஐபிஎல் போட்டியில் விளையாடிய ஆர்சிபி வீரர் விராட் கோலி ஒரே ஆட்டத்தில் பல சாதனைகளை புரிந்துள்ளார்.

2022ம் ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி பரபரப்பாக நடந்து வரும் நிலையில் தற்போது முடிவை நெருங்கியுள்ளது. லீக் ஆட்டங்கள் முடிய உள்ள நிலையில் ப்ளே ஆப்க்கு முதல் அணியாக குஜராத் டைட்டன்ஸ் தேர்வாகியுள்ளது.

மீதமுள்ள 3 இடங்களுக்கு 6 அணிகள் இடையே தீவிரமான போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் நேற்றைய லீக் சுற்றில் குஜராத் – பெங்களூர் அணிகள் மோதிக் கொண்டன. முதலில் பேட்டிங் செய்த குஜராத அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்திருந்தது.

இரண்டாவதாக களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 18 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் குவித்து வெற்றியை கைப்பற்றியது. இந்த போட்டியில் 54 பந்துகளில் 73 ரன்கள் குவித்த ஆர்சிபி வீரர் விராட் கோலி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த போட்டியில் 73 ரன்கள் அடித்தது மூலமாக ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு அணிக்காக அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை கோலி படைத்துள்ளார். ஆர்சிபி அணிக்காக 7000 ரன்களை குவித்துள்ளார் கோலி. அதேபோல சேஸிங்கில் 3000 ரன்களை கடந்த முதல் பேட்ஸ்மேன் என்ற சாதனையையும் கோலி படைத்துள்ளார்.