புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 20 மே 2022 (12:42 IST)

சென்னையை வென்று பிளே ஆப் இடத்தை உறுதி செய்யுமா ராஜஸ்தான்?

csk vs rr
சென்னையை வென்று பிளே ஆப் இடத்தை உறுதி செய்யுமா ராஜஸ்தான்?
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரில் இன்று சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி நடைபெற உள்ளது. இன்றைய போட்டியில் சென்னை வெற்றி பெற்றால் எந்தவிதமான மாற்றமும் புள்ளி பட்டியலில் இருக்காது என்றாலும் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றுக்கு செல்வதை உறுதி செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது 
 
ராஜஸ்தான் அணியை தற்போது 16 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் இருந்தாலும் டெல்லி மற்றும் பெங்களூரு அணிகள் ராஜஸ்தான் அணியை பின்னுக்கு தள்ளுவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே இன்றைய போட்டியில் ராஜஸ்தான் அணி வென்று விட்டால் பிளே ஆப் சுற்று உறுதி செய்யப்படும் என்பது குறிப்பிடதக்கது. எனவே ராஜஸ்தான் அணி இன்று வெற்றிக்காக தீவிரமாக விளையாடும் என்பது குறிப்பிடத்தக்கது
 
அதேபோல் சென்னை அணிக்கு இந்த தொடரின் கடைசி போட்டி என்பதால் ஆறுதல் வெற்றி பெற முயற்சிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது