ஐபிஎல் ஏலத்தில் விலை ஏறிய தீபக் ஹுடா!
இந்திய அணியில் இடம்பெற்று விட்டதால் தீபக் ஹூடாவின் அடிப்படை விலை ஏற்றப்பட்டுள்ளது.
பல ஆண்டுகளாக இந்திய அணியில் இடம்பெற போராடிக் கொண்டிருந்த தீபஹ் ஹூடாவுக்கு சமீபத்தைய வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இடம் கிடைத்து சில போட்டிகளில் விளையாடினார். இது இப்போது அவருக்கு வர இருக்கும் ஐபிஎல் ஏலத்தில் ஒரு பயனை அளித்துள்ளது.
ஐபிஎல் ஏலத்தில் 40 லட்ச ரூபாய் பிரிவில் வைக்கப்பட்டு இருந்த அவர், இப்போது கேப்புடு பிளேயர் ஆகிவிட்டதால் அவரின் அடிப்படை விலை 75 லட்ச் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.