1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 12 பிப்ரவரி 2022 (09:48 IST)

ரஜினியுடன் இப்போது படம் எதுவும் இல்லை… அறிவித்த இளம் இயக்குனர்!

இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் ரஜினியை வைத்து இயக்கிய பேட்ட திரைப்படம் கவனிப்பைப் பெற்ற படமாக அமைந்தது.

இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் குறும்படங்கள் மூலமாக தமிழ் சினிமாவுக்குள் நுழைந்து வெற்றிகரமான கமர்ஷியல் இயக்குனராக வலம் வந்துகொண்டிருக்கிறார். கடைசியாக அவர் இயக்கிய மகான் திரைப்படம் ஓடிடியில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

இந்நிலையில் ரஜினியுடன் அவர் விரைவில் இணைய உள்ளதாக சொல்லப்பட்டது. இதுபற்றி ஒரு நேர்காணலில் ‘ரஜினியுடன் இப்போதைக்கு படம் பண்ணும் திட்டம் எதுவும் இல்லை. அதுகுறித்து நாங்கள் பேசவில்லை. என்னுடைய மகான் திரைப்படம் இப்போதுதான் ரிலீஸ் ஆகியுள்ளது. அடுத்த படம் பற்றி விரைவில் அறிவிப்பேன்’ எனக் கூறியுள்ளார்.