திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 12 பிப்ரவரி 2022 (10:13 IST)

தேங்காய் சில்லு தொண்டையில் சிக்கி உயிரிழந்த குழந்தை!

சென்னையை அடுத்த பொன்னேரி அருகே உள்ள பாக்கம் எனும் கிராமத்தில் குழந்தையின் தொண்டையில் தேங்காய் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

சென்னையை அடுத்துள்ள பொன்னேரி பகுதிக்கு அருகே பாக்கம் எனும் கிராமம் உள்ளது. அங்கு வசித்து வரும் வசந்த் என்பவருக்கு சஞ்சீஸ்வரன் என்ற 3 வயது மகன் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று குழந்தை நேற்று வீட்டில் தேங்காய் சாப்பிட்டுள்ளது. அப்போது தேங்காய் சில்லு ஒன்று தொண்டையில் சிக்கிக் கொள்ளவே மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் பதறிப்போன பெற்றோர் பழவேற்காடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

ஆனால் அதற்குள்ளாகவே குழந்தை இறந்துள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.