தொடர்புடைய செய்திகள்
- ஆஸ்திரேலிவுக்கு செல்லும் மூன்று இந்திய வீரர்கள்… பூம்ராவுக்கு பதில் யார்?
- இந்தியாவில் ஜூனியர் பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி: இன்று தொடக்கம்
- உலகக்கோப்பை டி20 பயிற்சி ஆட்டம்: இந்திய அணி அபார வெற்றி!
- “இந்தியாவுக்கு எதிரான போட்டியில் 110 சதவீதம் தயாராக இருப்பார்…” ஷாகீன் அப்ரிடி குறித்து ரமீஸ் ராஸா தகவல்!
- “பூம்ரா, ஜடேஜா இல்லாததால் இந்த நல்லது நடக்கலாம்…” ரவி சாஸ்திரி கருத்து!
டி-20 உலகக் கோப்பை தொடரிலிருந்து விலகிய தீபக் சாஹர்!
டி-20 உலகக் கோப்பை தொடரில் இருந்து இந்திய வீரர் தீபக் சாஹர் விலகியுள்ள நிலையில் அவருக்குப் பதில் சென்னை கிங்ஸ் வீரர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
வரும் அக்டோபர் 16 ஆம் தேதி முதல் நவம்பர் 13 ஆம் தேதி வரை டி-20 உலகக் கோப்பை தொடர் நடக்கவுள்ளது.
இத்தொடரில், இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட அணிகள் விளையாடவுள்ளன.
இந்த நிலையில், டி-20 உலகக் கோப்பையில் இடம்பெற்றிருந்த பும்ரா காயம் காரணமாக இத்தொடரில் இருந்து வெளியேறிய நிலையில், தீபக் சாஹரும் இன்று விலகியுள்ளார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டிக்கு தீபக் சாஹர் பயிற்சி செய்த நிலையில், அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் டி-20 உலகக் கோப்பையில் இருந்து அவர் விலகினார் அவருக்குப் பதில் வாஷிங்டன் சுந்தர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், பெங்களூரில் நடந்த உடல் தகுதித்தேர்வில், தீபக் சாஹர் தேறவில்லை என்பதால் அவருக்குப்பதில், டி-20 உலகக் கோப்பையில் ஷர்துல் தாக்கூர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
Edited by Sinoj
அடுத்த கட்டுரையில்