வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : சனி, 8 அக்டோபர் 2022 (09:37 IST)

“இந்தியாவுக்கு எதிரான போட்டியில் 110 சதவீதம் தயாராக இருப்பார்…” ஷாகீன் அப்ரிடி குறித்து ரமீஸ் ராஸா தகவல்!

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இலங்கைக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாகீன் அப்ரிடிக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டது. அதனால் அவர் 6 வாரகாலத்துக்கு ஓய்வெடுக்க வேண்டும் என சொல்லப்பட்டது. மேலும் அவர் லண்டனுக்கு சென்று சிகிச்சையும் மேற்கொண்டார்.

இந்நிலையில் இம்மாதம் நடக்க உள்ள டி 20 உலகக்கோப்பை தொடருக்காக உலக கிரிக்கெட் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இதற்காக தங்கள் அணி விவரத்தை அனைத்து அணிகளும் அறிவித்துவிட்டன. இந்நிலையில் பாகிஸ்தான் அணியில்  காயத்தால் ஓய்வில் இருந்து வந்த ஷாகின் அப்ரிடி மீண்டும் அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.

உலகக்கோப்பை போட்டித் தொடரில் அக்டோபர் 23 ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிக்கு ஷாகீன் அப்ரிடி 110 சதவீதம் தயாராக இருப்பார் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ரமீஸ் ராஸா தெரிவித்துள்ளார்.