1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 10 டிசம்பர் 2020 (12:03 IST)

ஐந்தே நிமிடத்தில் கொரோனா இருப்பதை கண்டுபிடிக்கலாம்! இந்திய வம்சாவளி விஞ்ஞானியின் கண்டுபிடிப்பு!

கொரோனா இருப்பதை ஐந்தே நிமிடத்தில் கண்டுபிடிக்கும் விதத்தில் அமெரிக்காவில் கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளனர் விஞ்ஞானிகள்.

கொரோனா இருப்பதை கண்டுபிடிப்பதை கண்டறிய பல்வேறு சோதனைகள் உலகம் முழுவதும் நடைபெற்று வருகின்றன. ஆனால் அவற்றின் முடிவுகளெல்லாம் நீண்ட நேரம் பிடிக்கும் ஒன்றாக உள்ளன. இந்நிலையில் இப்போது அமெரிக்காவில் கிராபின் என்ற காகித அடிப்படையில் கொரோனா சோதனை மேற்கொண்டு ஐந்தே நிமிடத்தில் முடிவை தெரிந்துகொள்ளும் புதிய முறையை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

லினாய்ஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த இந்திய வம்சாவளி விஞ்ஞானி திபஞ்சன் பான் தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள், இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர். அவர்கள் உருவாக்கிய தொடுதிறன் சென்ஸார் ஒன்றை உருவாக்கினர்.  அதன் மூலம் கொரோனா இருக்கும் மாதிரிகள் மற்றும் இல்லாத மாதிரிகள் சோதிக்கப்பட்டதில் சரியான முடிவுகள் வெளியாகியுள்ளன.