1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Dawid warner equals sachin record in world cup

சச்சினின் சாதனையை சமன் செய்த டேவிட் வார்னர்! ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் ஆஸ்திரேலிய அணி 309 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று ம

ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் ஆஸ்திரேலிய அணி 309 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.

ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த நிலையில் அந்த அணி மிக அபாரமாக விளையாடி 399 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர் 93 பந்துகளில் 104 ரன்கள் அடித்தார். பின் வரிசை வீரராக களமிறங்கிய மேக்ஸ்வெல் மிக அபாரமாக 44 பந்துகளில் 106 ரன்கள் எடுத்தார்.  அவர் ஒன்பது பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்கள் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டியில் சதம் அடித்ததன் மூலம் உலகக் கோப்பை தொடரில் அதிக சதம் அடித்த ஆஸ்திரேலிய வீரர் என்ற சாதனையை டேவிட் வார்னர் படைத்துள்ளார். உலகக் கோப்பை தொடரில் இதுவரை 6 சதங்கள் அடித்துள்ள வார்னர் சச்சினின் சாதனையை சமன் செய்துள்ளார். அவருக்கு முன்னர் 7 சதங்களோடு ரோஹித் ஷர்மா முதலிடத்தில் உள்ளார்.
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
தோத்தாலும் கம்பீரமாக தோற்று போகணும்! – இங்கிலாந்து வீரர் மொயீன் அலி!