திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : சனி, 21 அக்டோபர் 2023 (13:55 IST)

நேற்றைய போட்டியில் இதைக் கவனீச்சிங்களா?... வார்னர் & மார்ஷ் படைத்த சாதனை!

பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்ற நிலையில் இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 9 விக்கெட் இழப்பிற்கு 367 ரன்கள் குவித்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான டேவிட் வார்னர் மற்றும்  மிட்செல் மார்ஷ் ஆகிய இருவரும் சதம் அடித்து அசத்தினர்.

டேவிட் வார்னர் 124 பந்துகளில் 163 ரன்களும், மிட்செல் மார்ஷ் 108 பந்துகளில் 121 ரன்கள் சேர்த்தார். இருவரும் அவுட் ஆனதும் ஆஸி அணியின் பேட்டிங் நிலை குலைந்தது.

இந்த போட்டியில் தொடக்க ஆட்டக்காரர்களான டேவிட் வார்னர் மற்றும் மிட்செல் மார்ஷ் ஆகிய இருவரும் இணைந்து 18 சிக்ஸர்களை விளாசினர். இதன் மூலம் அதிக சிக்ஸர்கள் விளாசிய தொடக்க ஆட்டக்காரர்கள் என்ற சாதனையை படைத்துள்ளனர்.