1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Csk ex player badrinath talked about Rohith Sharma captaincy

அவரால பெரிய பயன் இல்லை… அதனால கோலியே கேப்டனாக இருக்கலாம்… சிஎஸ்கே வீரர் கருத்து!

இந்தியா
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடிய தென்னாப்பிரிக்கா அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 32ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

இந்த தோல்வி குறித்து பேசிய கேப்டன் ரோஹித் ஷர்மா “இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் தகுதியே ஒரு அணியாக நாங்கள் பெறவில்லை. பேட்டிங்கில் கே எல் ராகுல் மட்டும்தான் சிறப்பாக விளையாடினார். பவுலர்கள் மைதானத்தை சரியாக பயன்படுத்தவில்லை.  ஒரு டெஸ்ட் போட்டியை வெல்ல நீங்கள் ஒரு அணியாக இணைந்து வெல்ல வேண்டும். இந்த மைதானம் பவுண்டரி அடித்து விளையாடக் கூடியதாக இருந்தது. அவர்கள் எப்படி விளையாடினார்கள் என்பதை பார்த்தாலே தெரியும். இன்னிங்ஸ்களிலும் நாங்கள் சிறப்பாக விளையாடவில்லை. அதனால் தோல்வி அடைந்தோம்” எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில்  வெளிநாட்டு டெஸ்ட் தொடர்களில் ரோஹித் ஷர்மா நல்ல தொடக்கத்தை அமைத்துக் கொடுப்பதில்லை. அதனால் டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலியே கேப்டனாக இருக்கலாம் என சி எஸ் கே அணியின் முன்னாள் வீரர் சுப்ரமண்யம் பத்ரிநாத் கருத்து தெரிவித்துள்ளார்.
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
இந்திய மகளிர் அணியை ஒயிட்வாஷ் செய்த ஆஸ்திரேலியா.. 3வது ஒருநாள் போட்டியிலும் வெற்றி..!