மக்களவைத் தேர்தலில் 375 தொகுதிகளில் போட்டி: காங்கிரஸ் முடிவால் இந்தியா கூட்டணி அதிர்ச்சி..!
இந்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியை வீழ்த்த இந்தியா கூட்டணி அமைக்கப்பட்டுள்ள நிலையில் அந்த கூட்டணி தேர்தல் வரை நீடிக்குமா என்ற சந்தேகம் அரசியல் விமர்சகர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி மக்களவை தேர்தலில் நாடு முழுவதும் 375 தொகுதிகளில் போட்டியிட இருப்பதாக கூறப்படுகிறது. இந்தியா கூட்டணியில் மொத்தம் 25 அரசியல் கட்சிகள் இருக்கும் நிலையில் காங்கிரஸ் மட்டுமே 375 தொகுதிகளில் போட்டியிட்டால் மீதமுள்ள 175 தொகுதிகள் மட்டுமே மற்ற கட்சிகளுக்கு கிடைக்கும் என்பதால் இந்தியா கூட்டணி கட்சிகள் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் காங்கிரஸ் கட்சிக்கும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும் இடையே உட்பூசல் வலுத்திருப்பதாக கூறப்படுகிறது. மாநில அளவில் பலமாக இருக்கும் திரிணாமுல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் இதனை ஏற்றுக் கொள்ளுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
Edited by Mahendran