வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : புதன், 3 ஜனவரி 2024 (07:23 IST)

வீடியோ மூலம் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஹர்திக் பாண்ட்யா!

உலகக் கோப்பை தொடரில் பங்களாதேஷுக்கு எதிரான போட்டியின் போது பந்துவீசிய ஹர்திக் பாண்ட்யா காலில் காயம் ஏற்பட்டு உடனடியாக மைதானத்தை விட்டு வெளியெறினார். இன்னும் அவர் காயத்தில் இருந்து மீளவில்லை. அதனால் உலகக் கோப்பை தொடரில் இருந்தே அவர் வெளியேறினார்.

இந்நிலையில் உலகக் கோப்பை தொடருக்குப் பிறகு நடக்க உள்ள ஆஸ்திரேலியா டி 20 தொடரிலும் அவர் இடம்பெறவில்லை. அதனால் அந்த டி 20 தொடருக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஹர்திக் பாண்ட்யா முழுவதுமாக காயத்தில் இருந்து குணமாக அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை ஆகும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் ஹர்திக் பாண்ட்யா அடிக்கடி காயம் அடைவது குறித்து கேலிகளும் கிண்டல்களும் எழுந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில் இப்போது ஹர்திக் பாண்ட்யா தான் கடின உடற்பயிற்சிகளை செய்யும் வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியிட்டு “ஒவ்வொரு நாளும் முன்னேற்றம்” எனக் கூறியுள்ளார்.