டி 20 கிரிக்கெட்டில் கோலி & ரோஹித் ஷர்மாவின் எதிர்காலம் என்ன? இன்று நடக்கும் முக்கிய சந்திப்பு!
கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகிய இருவரும் இந்திய டி 20 அணியில் எடுக்கப்படுவதில்லை. கடைசியாக அவர்கள் 2022 ஆம் ஆண்டு நடந்த டி 20 உலகக் கோப்பையில் விளையாடினார்கள்.
கோலி மற்றும் ரோஹித் ஷர்மாவின் வயதைக் கவனத்தில் கொண்டு அவர்களுக்கு மாற்று வீரர்களை தேடவேண்டிய கட்டாயத்தில் இந்திய அணியின் தேர்வுக்குழு உள்ளது. ஆனால் அவர்களுக்கு 2024 ஆம் ஆண்டு நடக்கும் டி 20 உலகக் கோப்பையில் வாய்ப்பளிக்க வேண்டும் என்ற குரல்களும் எழுந்துள்ளன.
இந்நிலையில் தென்னாப்பிரிக்காவுக்கு இன்று செல்லும் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கர் இதுபற்றி கோலி மற்றும் ரோஹித் ஷர்மாவிடம் ஆலோசனை நடத்த உள்ளதாக சொல்லப்படுகிறது. அவர்கள் இருவருக்கும் இந்த உலகக் கோப்பை தொடரில் விளையாட வாய்ப்பளிக்கப்படும் என தெரிகிறது. விரைவில் ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடக்க உள்ள டி 20 தொடருக்கான அணி அறிவிப்பு நடக்க உள்ள நிலையில் அதில் இவர்கள் இருவரின் பெயரும் இடம்பெறும் என சொல்லப்படுகிறது.