வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : செவ்வாய், 27 டிசம்பர் 2022 (09:18 IST)

தோனிக்கு பின் சி எஸ் கே அணிக்குக் கேப்டன் யார்? காசி விஸ்வநாதன் சூசகம்!

சி எஸ் கே அணிக்கு கடந்த ஆண்டு ஜடேஜா கேப்டனாக நியமிக்கப்பட்டு பின்னர் விலகிக்கொண்டார்.

அதனால் கடந்த ஆண்டு சி எஸ் கே அணியை இறுதி போட்டிகளில் தோனி வழிநடத்தினார். ஆனால் அப்போதும் அணியால் ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியவில்லை.இதனால் ஜடேஜா அதிருப்தியில் இருந்ததாகவும், அவர் சிஎஸ்கே அணியில் இருந்து விலகுவார் என்று கூறப்பட்டது. மேலும் அவரது சமூக வலைத்தளத்தில் சிஎஸ்கே சம்பந்தப்பட்ட பதிவுகள் அனைத்தும் டெலிட் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் அவர் இந்த ஆண்டும் சி எஸ் கே அணிக்காகதான் விளையாட உள்ளார்.

இந்நிலையில் இப்போது சி எஸ்கே அணியில் உலகின் தலைசிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவரான பென் ஸ்டோக்ஸ் எடுக்கப்பட்டுள்ளார். அதனால் தோனிக்குப் பின்னர் அவர் அணிக்குக் கேப்டனாக நியமிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது.

ஆனால் சென்னை அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன்,  வெளிநாட்டு வீரர்களை கேப்டனாக நியமிப்பதில் சிக்கல் உள்ளது. ஆனால் எந்தவொரு வீரரும் கேப்டனுக்கான போட்டியில் இன்னும் ருத்துராஜை தாண்டி செல்லவில்லை” எனக் கூறியுள்ளார். அதனால் சென்னை அணிக்கு அடுத்த கேப்டனாக ருத்துராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.