ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 23 டிசம்பர் 2022 (19:18 IST)

ஐபிஎல் ஏலம்...தோனியை புகழ்ந்த பிரபல வீரர்....ரசிகர்கள் மகிழ்ச்சி

ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் கோடைக் காலத்தில் நடக்கும்  ஐபிஎல் போட்டிக்கு என உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.

 இந்த நிலையில், வரும் 16 வது ஐபில் சீசன் அடுத்த ஆண்டு நடக்கும்  நிலையில், இதற்கான ஐபிஎல் மினி ஏலம்  இன்று  கொச்சியில் நடந்துவருகிறது.

இதில், 10 அணிகள் 163 வீரர்களை தக்கை வைத்துள்ளனர். இதில், 85 வீரர்கள் விடுவிக்கப்பட்டனர்.

மீதமுள்ள வீரர்களுக்கான  ஏலத்தில், சென்னை அணிக்கு ரஹானேவை 50 லட்சத்திற்கு வாங்கியுள்ளனர்.

அதேபோல் ரஷீத்தை அடிப்படை விலையான ரூ.20 லட்சத்திற்கும்,  பிரபல வீரர் பென் ஸ்டோக்ஸை ரூ. 16.25 கோடிக்கும் சென்னை அணி ஏலத்தில் எடுத்துள்ளது.

இந்த நிலையில்,  பென் ஸ்டோக்ஸை ஏலத்தில் எடுத்துள்ளதை நினைத்து மகிழ்கிறேன் என்று  முன்னாள் வீரர் கிறிஸ்கெயில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: எந்த ஒரு வீரரும் தோனி தலைமையின் கீழ் விளையாட விரும்புவர். ஏனெனில் தோனியை அனைவரும் விரும்புகிறோம் என்று தெரிவித்துள்ளார்.