வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 24 டிசம்பர் 2022 (22:26 IST)

சென்னை கிங்ஸ்-ல் ஒரு தமிழ் வீரரும் இல்லையா? ரசிகர்கள் ஏமாற்றம்

chennai kings
இந்தியாவில் ஏப்ரல் – மே மாதங்களில் நடக்கும்  ஐபிஎல் போட்டிக்கு என உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.

இந்த நிலையில், வரும் 16 வது ஐபில் சீசன் அடுத்த ஆண்டு நடக்கும்  நிலையில், இதற்கான ஐபிஎல் மினி ஏலம்   நேற்று கொச்சியில் நடந்தது.

இதில், 10 அணிகள் 163 வீரர்களை தக்க வைத்துள்ளனர். இதில், 85 வீரர்கள் விடுவிக்கப்பட்டனர்.

மீதமுள்ள வீரர்களுக்கான  ஏலத்தில், சென்னை அணிக்கு தோனி தலைமையில், ரஹானே, ரஷீத்,  பென் ஸ்டோக்ஸை (ரூ. 16.25 கோடி),  உள்ளிட்ட வீரர்களை  சென்னை அணி ஏலத்தில் எடுத்துள்ளது.

ஆனால், இந்த முறை தமிழத்தைச் சேர்ந்த ஒரு வீரர் கூட சென்னை அணியில் இடம்பெறாதது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இலங்கையைச் சேர்ந்த 2 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

பெறிதும் எதிர்பார்க்கப்பட்ட முரளி விஜய், அஸ்வின், பத்ரி நாத், பாலாஜி உள்ளிட்ட தமிழக வீரர்கள் இடம்பெறாதது ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த நிலையில்,  பென் ஸ்டோக்ஸை ஏலத்தில் எடுத்துள்ளதை நினைத்து மகிழ்கிறேன் என்று  முன்னாள் வீரர் கிறிஸ்கெயில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: எந்த ஒரு வீரரும் தோனி தலைமையின் கீழ் விளையாட விரும்புவர். ஏனெனில் தோனியை அனைவரும் விரும்புகிறோம் என்று தெரிவித்துள்ளார்.