1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified வெள்ளி, 26 மே 2023 (15:30 IST)

ரொம்ப சகஜமாக பேசி சிரித்த ‘தல’ தோனி! – உற்சாகத்தில் சேப்பாக்க மைதான ஊழியர்கள்!

MSD
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அனைத்து போட்டிகளும் சென்னையில் முடிந்த நிலையில் சேப்பாக்க மைதான ஊழியர்களை சந்தித்து அன்பளிப்பு வழங்கியுள்ளார் சிஎஸ்கே கேப்டன் தோனி.

நடப்பு ஐபிஎல் சீசன் போட்டிகள் பரபரப்பாக நடந்து வந்த நிலையில் லீக் போட்டிகள் முடிந்து இறுதி போட்டியை நெருங்கியுள்ளது. இந்த போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இறுதி போட்டி அகமதாபாத்தில் நடைபெற உள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் 7 லீக் போட்டிகள் மற்றும் குவாலிஃபயர் போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கடைசி போட்டியும் (குவாலிஃபயர் 1) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது.

MS Dhoni


இந்த கடைசி போட்டியின்போது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பல்வேறு பணிகளை செய்யும் ஊழியர்களை சந்தித்து தனது நன்றிகளை தெரிவித்தார் சிஎஸ்கே கேப்டன் தோனி. தோனியை கண்ட மகிழ்ச்சியில் அவரிடம் அவர்கள் ஆட்டோகிராப் வாங்கி கொண்டு, புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் சிறிய அன்பளிப்பை எம்.எஸ்.தோனி ஊழியர்களுக்கு வழங்கினார்.

Edit by Prasanth.K