1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified வியாழன், 25 மே 2023 (11:45 IST)

சிஎஸ்கே-மும்பை தான் ஃபைனல்.. சென்னைக்கு தான் கப்: கணிக்கும் ரசிகர்கள்..!

chennai super kings
2023 ஆம் ஆண்டின் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் மும்பை மற்றும் சென்னை அணிகள் தான் இறுதி போட்டிக்கு செல்லும் என்றும் சென்னை அணி தான் கோப்பையை வெல்லும் என்றும் ரசிகர்கள் கணித்துள்ளனர். 
 
நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்றுள்ள நிலையில் நாளை மும்பை அணி குஜராத் அணியுடன் மோத உள்ளது. இதனை அடுத்து நாளைய போட்டியில் வெற்றி பெற்று மும்பை, சென்னை அணியுடன் இறுதி போட்டியில் மோதும் என்றும், சிஎஸ்கே கோப்பையை வெல்லும் என்றும் ரசிகர்கள் தங்களது கணிப்பை வெளியிட்டுள்ளனர். 
 
மும்பை மற்றும் சென்னை அணிக்கு இடையே தான் பைனல் நடக்கும் என்றும் கண்டிப்பாக சென்னை வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றும் என்றும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர் 
 
சிஎஸ்கே - மும்பை பைனல் போட்டியை நாங்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறோம் என பல ரசிகர்கள் விருப்பம் தெரிவித்துள்ள நிலையில் நாளைய போட்டியில் வெற்றி பெற்று சென்னை அணியுடன் மும்பை இறுதிப் போட்டியில் மோதுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
Edited by Mahendran