1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 27 மே 2021 (15:14 IST)

தடுப்பூசி போட்டுக் கொண்ட கிரிக்கெட் வீரர் நடராஜன்!

தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் கிரிக்கெட் வீரர் நடராஜனும் தடுப்பூசி போட்டுக் கொண்டார்.

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அரசு, தனியார் மருத்துவமனைகளில் மட்டுமல்லாமல் பல்வேறு பகுதிகளிலும் முகாம் அமைத்து தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்படுகிறது.

ஆரம்பத்தில் மக்கள் தடுப்பூசி எடுத்துக் கொள்ள தயக்கம் காட்டினாலும் தற்போது ஆர்வமுடன் முன்வந்து தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். இந்நிலையில் இன்று தமிழகத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் தடுப்பூசி முதல் டோஸ் செலுத்திக் கொண்டார்.