திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 27 மே 2021 (13:17 IST)

இந்தியாவுக்கு 5 கோடி தடுப்பூசி கொடுக்க அமெரிக்க நிறுவனம் சம்மதம்!

அமெரிக்காவின் பைஸர் நிறுவனம் இந்தியாவுக்கு 5 கோடி தடுப்பூசிகளை வழங்க சம்மதம் தெரிவித்துள்ளது.

மாநில அரசுகளுக்கு நேரடியாக தடுப்பூசி கொடுப்பதில்லை என அமெரிக்காவின் மாடர்னா மற்றும் பைஸர் ஆகிய தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்கள் தெரிவித்தன. இந்நிலையில் இப்போது மத்திய அரசு பைஸர் நிறுவனத்துடன் நடத்திய பேச்சுவார்த்தையில் 12 வயதுக்கு மேற்பட்டவர்கள் பயன்படுத்தும் 5 கோடி தடுப்பூசிகளை ஜூன் முதல் அக்டோபர் மாதங்களில் தர முடிவெடுத்துள்ளதாக அறிவித்துள்ளனர். இந்த தடுப்பூசியை ஒரு மாதம் வரை வைத்து பயன்படுத்தலாம் என சொல்லப்படுகிறது.