1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 27 மே 2021 (13:05 IST)

செங்கல்பட்டு தடுப்பூசி ஆலையை தமிழக அரசே நடத்த முடிவு!

செங்கல்பட்டு தடுப்பூசி ஆலையை தமிழக அரசே ஏற்று நடத்த முடிவு செய்திருப்பதாக முதல்வர் அறிவித்து உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
மத்திய அரசுக்கு சொந்தமான செங்கல்பட்டு தடுப்பூசி ஆலையில் தடுப்பூசி தயாரிக்கும் அனைத்து இயந்திரங்களும் தயார் நிலையில் இருந்தும் கடந்த சில வருடங்களாக அந்த ஆலை இயங்காமல் உள்ளது. இந்த நிலையில் மத்திய அரசுக்கு சொந்தமான செங்கல்பட்டு தடுப்பு ஊசி ஆலையை தமிழக அரசுக்கு குத்தகைக்கு வழங்க கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார் 
 
தமிழகத்திடம் அந்த ஆலையை ஒப்படைத்தால் உடனடியாக தடுப்பூசி உற்பத்தி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் நேற்று செங்கல்பட்டு தடுப்பூசி ஆலையை பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின் ஆலையை இயக்க நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஆலோசித்தார். மேலும் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று டெல்லியில் உள்ள மத்திய அமைச்சரை சந்தித்து இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.