1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Chahal reacted about not picked up by the selection committee

அணியில் இடம் கிடைக்காத சஹால்… டிவிட்டரில் ரியாக்‌ஷன்!

சஹால்
இந்தியா உள்ளிட்ட 6 ஆசிய நாடுகள் கலந்து கொள்ளும் ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் செப்டம்பர் மாதம் தொடங்க உள்ள நிலையில் ஆசியக் கோப்பைக்கான அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ஆசியக் கோப்பைக்கான அணியே பெரும்பாலும் உலகக் கோப்பைக்கான அணியாகவும் இருக்கும் என எதிர்பார்க்கபப்டுகிறது.

இந்த் தொடரில் இந்திய அணியின் சுழல்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சஹால் இடம்பெறவில்லை. இது அவருக்கு மிகப்பெரிய அளவில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதை அவரே டிவிட்டரில் எமோஜிக்கள் மூலமாக தெரிவித்துள்ளார். அதில் விடியலுக்காக காத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

கடைசியாக அவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் ஒரு ஆண்டுக்கு பிறகு இடம் பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்
கோலி கிரிக்கெட்டுக்கு வராமல் இருந்திருந்தால்… புவனேஷ்வர் குமாரின் ஜாலி பதில்!