தொடர்புடைய செய்திகள்
- உலகக் கோப்பையை யார் வெல்வது ? கங்குலி தகவல்
- ராமர் கோயிலை பார்வையிட்ட ரஜினிகாந்த் - வைரலாகும் போட்டோ
- எதிர்கால இந்தியாவின் கேப்டன் ருத்துராஜ் கெய்க்வாட்.. முன்னாள் வீரரின் கருத்து!
- இஷான் கிஷான் டிராவிட் மனதில் நிச்சயம் இருப்பார்… சவுரவ் கங்குலி கருத்து!
- ஆடும் லெவனை தேர்வு செய்வதுதான் மிகப்பெரிய தலைவலி… இந்திய அணி குறித்து பும்ரா!
இப்போது எங்கள் தேர்வில் ஷிகார் தவான் இல்லை… தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கர்!
இந்திய ஒருநாள் அணியில் தொடக்க ஆட்டக்காரர் ஷிகார் தவான் கடந்த சில மாதங்களாகவே இடமளிக்கப்படவில்லை. தொடர்ந்து சீரான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தி வரும் நிலையில் புறக்கணிக்கப்பட்டிருப்பதற்கு ஷுப்மன் கில்லின் தேர்வுதான் காரணமாக சொல்லப்படுகிறது.
இந்திய அணிக்காக பல வெளிநாட்டு தொடர்களில் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ள தவான் அடுத்த ஆண்டு உலகக்கோப்பை தொடர் வரையாவது விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது பிசிசிஐ எடுத்துள்ள முடிவு அநியாயமானது என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.ஆசியப் போட்டிக்கான அணி.
இந்நிலையில் இந்திய தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கர் ஷிகார் தவான் குறித்து பேசும்போது “இந்தியாவுக்காக தவான் கடந்த காலங்களில் சிறப்பாக விளையாடியுள்ளார். ஆனால் இப்போது தொடக்க ஆட்டக்காரரான தேர்வுக்கு ரோஹித் ஷர்மா, ஷுப்மன் கில் மற்றும் இஷான் கிஷான் ஆகியோர் உள்ளனர்” என தெளிவாகக் கூறியுள்ளார். அதனால் இனிமேல் தவானுக்கு இந்திய அணியில் இடம் கிடைப்பது குதிரைக் கொம்பு நிலை என்பது தெளிவாகியுள்ளது.
அடுத்த கட்டுரையில்