திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 7 ஜூலை 2022 (09:08 IST)

இன்று ”தல” தோனி பிறந்தநாள் – ட்ரெண்டாகும் Happy Birthday Legend!

இன்று இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திரசிங் தோனியின் பிறந்தநாளையொட்டி பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்தவர் எம்.எஸ்.தோனி. தான் கேப்டனாக இருந்த காலத்தில் இந்திய அணியை பல்வேறு சாதனைகள் படைக்க செய்த தோனி தற்போது சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றிருந்தாலும், ஐபிஎல்லில் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வருகிறார்.

ஐபிஎல் ஆரம்பம் முதலே சிஎஸ்கே அணிக்காக விளையாடி வரும் தோனிக்கு தமிழ்நாட்டில் அதிகமான ரசிகர்கள் உள்ளனர். அவர்கள் தோனியை “தல” என செல்லமாக அழைக்கின்றனர். இன்று எம்.எஸ் தோனியின் பிறந்தநாளையொட்டி ட்விட்டரில் "Happy Birthday Legend" #HappyBirthdayDhoni உள்ளிட்ட ஹேஷ்டேகுகள் ட்ரெண்டாகி வருகின்றன. பல்வேறு திரை பிரபலங்களும் தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.