வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 12 மே 2022 (15:14 IST)

ஜடேஜா விலகல் பின்னணி என்ன? அதிகாரப்பூர்வமாக அறிவித்த சி எஸ் கே!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான ஜடேஜா விலகல் பற்றி அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

நடப்பு ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் தொடங்கி சிறப்பாக நடந்து வரும் நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறது. அணியின் முந்தைய கேப்டன் தோனிக்கு பதிலாக இந்த முறை கேப்டனாக ஜடேஜா நியமிக்கப்பட்டார். ஆனால் ஜடேஜா கேப்டன் ஆனது முதலாக அணி தோல்வியை சந்தித்து வரும் நிலையில் ஜடேஜாவாலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த இயலவில்லை. இதனால் தான் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக அறிவிக்க  மீண்டும் தோனியே கேப்டன் பதவியை ஏற்று அணியை வழிநடத்தி வருகிறார்.

இந்நிலையில் இந்த சீசனில் மீதமுள்ள போட்டிகளில் இருந்து ஜடேஜா விலகியுள்ளார். இது சம்மந்தமாக சி எஸ் கே அணி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் “ ஜடேஜாவுக்கு பில்டிங்கின் போது தோள்பட்டையில் காயம் ஏற்பட்ட காயத்தை அவர் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டார். ஆனால் அவரின் காயத்தில் முன்னேற்றம் இல்லாததால் அவர் இந்த தொடரில் இருந்து விலகுகிறார். அவர் சீக்கிரம் திரும்பி வருவார் என்ற நம்பிக்கை உள்ளது” எனக் கூறியுள்ளது.