செவ்வாய், 6 ஜூன் 2023
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated: சனி, 21 ஜனவரி 2023 (09:19 IST)

இன்று இரண்டாவது ஒருநாள் போட்டி… தொடரைக் கைப்பற்றுமா இந்தியா?

இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடக்க உள்ளது.

நியுசிலாந்து அணி இந்தியாவுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இரு தினங்களுக்கு முன் நடந்த முதலாவது ஒருநாள் போட்டியில்  இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியின் சுப்மன் கில் மற்றும் நியுசிலாந்து அணியின் பிரேஸ்வெல் ஆகியோரின் சிறப்பான சதம் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

இதையடுத்து இன்று ராய்ப்ப்பூரில் இரண்டாவது ஒருநாள் போட்டி தொடங்க உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் தொடரைக் கைப்பற்றும். அதற்கான முனைப்பில் இந்திய அணி உள்ளது. இந்திய அணியில் தொடர்ந்து இஷான் கிஷான், கோலி, மற்றும் சுப்மன் கில் ஆகியோர் சிறப்பாக விளையாடி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.