திங்கள், 29 டிசம்பர் 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வெள்ளி, 20 ஜனவரி 2023 (12:53 IST)

தோனியின் சாதனையை சமன் செய்த நியுசிலாந்து வீரர் பிரேஸ்வெல்!

தோனியின் சாதனையை சமன் செய்த நியுசிலாந்து வீரர் பிரேஸ்வெல்!
இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியாக அபாரமாக விளையாடி சதமடித்தார் பிரேஸ்வெல்.

இரு தினங்களுக்கு முன்னர் நடந்த இந்தியா நியுசிலாந்து போட்டி பரபரப்பாக கடைசி நிமிடம் வரை செல்ல காரணமாக இருந்தவர் நியுசிலாந்து ஆல்ரவுண்டர் பிரேஸ்வெல்தான். நியுசிலாந்து அணி 6 விக்கெட்களை இழந்து தடுமாறிய போது அசராமல் விளையாடி சதம் அடித்து வெற்றிக்கு அருகே அணியை அழைத்து வந்தார்.

இந்த போட்டியில் 7 ஆவது வீரராக இறங்கி சதமடித்த பிரேஸ்வெல், முன்பு ஒருமுறையும் இதே வரிசையில் இறங்கி சதமடித்து அசத்தியுள்ளார். இதன் மூலம் 7 ஆவது வீரராக களமிறங்கிய 2 சதங்கள் அடித்த தோனியின் சாதனையை பிரேஸ்வெல் சமன் செய்துள்ளார்.