திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Modified: சனி, 25 ஆகஸ்ட் 2018 (15:44 IST)

பும்ரா பந்து வீச லாயக்கில்லை: மைக்கேல் ஹோல்டிங்

இந்திய கிரிக்கெட் அணி வீரர் பும்ரா பந்து வீசுவதற்கு சரிப்பட்டு வரமாட்டார் என மைக்கேல் ஹோல்டிங் விமர்சித்துள்ளது இந்திய  ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 
பும்ரா குறித்து அவர் கூறியது பின்வருமாறு, பும்ரா புதிய பந்தில் வீசக்கூடியவர் அல்ல, அவரை இங்கிலாந்து தொடருக்கு நானாக இருந்தால் தேர்வு செய்திருக்க மாட்டேன்.  
 
நான் புதிய பந்தில் வீச பும்ராவை அழைக்க மாட்டேன். புதிய பந்தில் இஷாந்த், ஷமி கூடுதலாக ஸ்விங் செய்கின்றனர். புவனேஷ்வர் குமார் இல்லாத போது இவர்கள்தான் தொடக்கத்தில் வீச வேண்டும்.
 
நான் பார்த்தவரையில் பும்ரா, வைட் ஆஃப் த கிரீசிலிருந்து பந்தை உள்ளே கொண்டு வந்து பிறகு சற்றே வெளியே எடுக்கிறார் இது பழைய பந்துக்குப் பொருந்தும். பந்து பழசான பிறகே பும்ரா திறமையாக வீசுகிறார் என தெரிவித்துள்ளார்.