1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Ravi shastri playing eleven and batting order for Headingley test

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி… ரவி சாஸ்த்ரி கணித்த ப்ளேயிங் லெவன்!

இந்திய அணி
இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக . இளம் இந்திய அணி இங்கிலாந்து சென்று அங்கு பயிற்சியை மேற்கொண்டு வருகிறது.  முதல் டெஸ்ட் போட்டி ஹெட்டிங்லேவில் வரும் ஜூன் 20 ஆம் தேதி தொடங்கவுள்ளது.

இம்முறை கோலி, ரோஹித் மற்றும அஸ்வின் ஆகிய் மூன்று மூத்த வீரர்கள் இல்லாமல் இளம் வீரர்களைக் கொண்ட அணி இங்கிலாந்துக்கு சென்றுள்ளது. இந்த இளம் அணிக்குக் கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். ரிஷப் பண்ட் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் முதல் டெஸ்ட் போட்டியில் ப்ளேயிங் லெவன் என்னவாக இருக்கும்? இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் என்னவாக இருக்கும்? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்த்ரி தன்னுடைய ப்ளேயிங் லெவன் அணி மற்றும் பேட்டிங் ஆர்டரை பரிந்துரை செய்துள்ளார்.

ரவி சாஸ்திரியின் பிளேயிங் லெவன்.
யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல், சாய் சுதர்ஷன், ஷுப்மன் கில் (கேப்டன்), கருண் நாயர், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், பிரசித் கிருஷ்ணா அல்லது அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரீத் பும்ரா, முகமது சிராஜ்.

 
அடுத்த கட்டுரையில்
The making of Ravichandra ashwin... அஸ்வினின் கிரிக்கெட் வாழ்க்கையை ஆவணப்படமாக எடுத்த சிஎஸ்கே.. டிரைலர் ரிலீஸ்!