1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Bengali incident Shaqan players Dhoni shared an interesting incident

'பெங்காலி சம்பவம்'.....ஷாக்கான வீரர்கள்....தோனி பகிர்ந்த சுவாரஸ்ய சம்பவம்

Thala Dhoni
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் ஐபில் கிரிக்கெட்டில் சென்னை கிங்ஸ் அணியின் கேப்டனுமான தோனி ஒரு சுவாரஸ்ய சம்பவத்தை பேட்டியளில் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, கிரிக்கெட்டில் சேர்வதற்கு முன்பு கரக்பூரில் டிக்கெட் பரிசோதகராக பணியாற்றியவர்.

இந்த  நிலையில்  சமீபத்தில் ஒரு பேட்டியின்போது, நான் டிக்கெட் பரிசோதகராக  கரக்பூரியில் பணியாற்றியதால் பெங்காலியில் பேசினால் என்னால் புரிந்துகொள்ள முடியும். ஒருமுறை வங்கதேசத்திற்கு எதிரான போட்டியின் பேட்டிங் செய்து கொண்டிருந்தேன். எனக்கு பெங்காலி தெரியும் என அந்த அணி வீரர்களுக்கு தெரியவில்லை. எப்படி பந்துவீச வேண்டும் என கீப்பர் பந்து வீச்சாளருக்கு அறிவுரை கூறிக் கொண்டிருந்தார்.

அதனால், பந்து வீச்சாளர் எப்படி பந்து வீசுவார் என்பது எனக்கு தெரிந்துவிட்டது. போட்டி முடிந்த பின் அவர்கள் பேசுவதை கேட்டு நான் ரியாக்சன் செய்தேன். ‘’ஹே இவருக்கு பெங்காலி மொழி தெரிகிறது ‘’என அதிர்ச்சியடைந்தார். என்று தெரிவித்துள்ளார்.

இந்தப் பேட்டி வைரலாகி வருகிறது.
About Writer
Sinoj
அடுத்த கட்டுரையில்
இன்று பாகிஸ்தானோடு பலப்பரீட்சை… டாஸ் வென்ற பங்களாதேஷ் எடுத்த முடிவு!