வியாழன், 2 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 31 அக்டோபர் 2023 (10:41 IST)

இந்த பேர், புகழ் மறையாதே.. இன்னும் ஏறுமே! – 8வது முறையாக பலோன் டி’ஓர் விருதை வென்ற மெஸ்ஸி!

Messi
உலகின் சிறந்த கால்பந்து வீரருக்கு வழங்கப்படும் பலோன் டி’ஓர் விருதை எட்டாவது முறையாக பெற்று சாதனை படைத்துள்ள லியோனல் மெஸ்ஸி.



நவீன உலக கால்பந்து ஜாம்பவான்களில் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ள வீரர்களில் முக்கியமானவர் லியோனல் மெஸ்ஸி. அர்ஜெண்டினா கால்பந்து வீரரான மெஸ்ஸி க்ளப் ஆட்டங்களிலும் பார்சிலோனா உள்ளிட்ட பல அணிகளுக்காக விளையாடியுள்ளார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற ஃபிபா உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஏழு முறை கோல்கள் அடித்த மெஸ்ஸி நான்கு முறை ஆட்டநாயகன் விருதை வென்றிருந்தார். இந்நிலையில் இந்த ஆண்டிற்கான சிறந்த கால்பந்து வீரருக்கான ஃபிபாவின் பலோன் டி’ஓர் விருதை 8வது முறையாக பெற்றுள்ளார் லியோனல் மெஸ்ஸி.

இந்த பலோன் டி’ஓர் விருத்திற்கு அதிக முறை பரிந்துரைக்கப்பட்டவரும், அதிக முறை வென்றவரும் மெஸ்ஸி மட்டுமே என்பது அவரது சாதனையிலும் சாதனையான செயல். இந்த விருதுக்கான பட்டியலில் ப்ரான்ஸ் நாட்டின் கிலியம் எம்பாபேவும் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Edit by Prasanth.K