திங்கள், 17 நவம்பர் 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வியாழன், 7 செப்டம்பர் 2023 (15:18 IST)

9 ஆண்டுகளுக்கு பிறகு ஐபிஎல் தொடரில் களமிறங்கும் ஆஸி வீரர்!

9 ஆண்டுகளுக்கு பிறகு ஐபிஎல் தொடரில் களமிறங்கும் ஆஸி வீரர்!
உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் லீக் போட்டியான ஐபிஎல் தொடர் இதுவரை 15 சீசன்கள் நடந்துள்ளது. ஒரு ஆண்டு தேசிய கிரிக்கெட் அணிக்காக விளையாடுவதற்கு சமமான ஊதியத்தை ஒன்றரை மாதத்தில் ஐபிஎல் தொடரில் சம்பாதித்து விடலாம் என்பதால் அனைத்து கிரிக்கெட் வீரர்களும் ஐபிஎல் தொடரில் விளையாட ஆர்வமாக உள்ளனர்.

ஆனால் உலகின் அச்சுறுத்தும் பவுலர்களில் ஒருவராக இன்று விளங்கும் ஆஸி அணியின் மிட்செல் ஸ்டார்க் ஐபிஎல் தொடரில் கடந்த 9 ஆண்டுகளாக விளையாடவில்லை.

இந்நிலையில் இப்போது அடுத்த ஆண்டு நடக்க உள்ள ஐபிஎல் மினி ஏலத்தில் கலந்துகொள்ள உள்ளதாக அறிவித்துள்ளார். இதனால் அடுத்த ஆண்டு ஏலத்தில் அவரை எடுக்க அணிகளுக்குள் மிகப்பெரிய போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.