1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Ben stokes may not available for ipl 2024

அடுத்த ஆண்டும் சி எஸ் கே அணியில் இடம்பெற மாட்டாரா? பிரபல வீரர் பற்றிய தகவல்!

பென் ஸ்டோக்ஸ்
சென்னை அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ள பென் ஸ்டோக்ஸ் இந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் 16.5 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் எடுக்கப்பட்டார். இந்த சீசனில் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர்களில் பென் ஸ்டோக்ஸும் ஒருவர்.

இந்நிலையில் ஐபிஎல் போட்டிகள் தொடங்கி பெரும்பாலான போட்டிகள் நிறைவடைந்துவிட்ட நிலையில், முதல் இரண்டு போட்டிகளில் மட்டுமே அவர் விளையாடினார். காயம் காரணமாக மற்ற போட்டிகளில் அவர் விளையாடவில்லை.

இந்நிலையில் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரிலும் அவர் விளையாடமாட்டார் என சொல்லப்படுகிறது. ஏனென்றால் காலில் ஏற்பட்டுள்ள காயத்துக்கு அவர் அறுவை சிகிச்சை செய்து கொள்ள உள்ளாராம். இந்த தகவல் சென்னை அணி ரசிகர்களுக்கு ஏமாற்றமானதாக அமைந்துள்ளது.
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
உலகக் கோப்பையில் இந்தியா vs ஆஸ்திரேலியா … ஆன்லைன் டிக்கெட் விற்பனை எப்போது?