1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : செவ்வாய், 1 ஆகஸ்ட் 2023 (07:31 IST)

ஆஷஸ்: 5 ஆவது டெஸ்ட்டை வென்று தொடரை சமன் செய்த இங்கிலாந்து!

ஆஷஸ் தொடரின் இறுதி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்துள்ளது. ஐந்தாவது டெஸ்ட் போட்டி லண்டன் மைதானத்தில் நடந்த நிலையில் இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி 283 ரன்களுக்கு முதல் நாளில் ஆட்டமிழந்தது.

அதையடுத்து ஆடிய ஆஸி அணி இரண்டாம் நாளில் 295 ரன்கள் சேர்த்து அனைத்து விக்கெட்களையும் இழந்துள்ளது. முதல் இன்னிங்ஸில் 12 ரன்கள் பின்தங்கிய இங்கிலாந்து அணி, இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாகவும் அதிரடியாகவும் விளையாடியது. இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 395 ரன்கள் சேர்த்தது. இதன் மூலம் ஆஸி அணியின் வெற்றிக்கு இலக்காக 384 ரன்கள் நிர்னயிக்கப்பட்டது.

இதையடுத்து நான்காவது இன்னிங்ஸை தொடர்ந்து ஆடிவரும் ஆஸ்திரேலிய அணி நான்காம் நாள் ஆட்டமுடிவில் விக்கெட் இழப்பின்றி 135 ரன்கள் சேர்த்துள்ளது. ஐந்தாவது நாள் ஆட்டத்தில் மெல்ல மெல்ல விக்கெட்களை இழந்து கடைசியில் அனைத்து விக்கெட்களையும் 334 ரன்களுக்கு இழந்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் ஆஷஸ் தொடர் 2-2 என்ற கணக்கில் சமன் ஆனது.