1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Updated : புதன், 5 ஆகஸ்ட் 2020 (08:41 IST)

ஐபிஎல் ஸ்பான்சரான சீன நிறுவனம் வெளியேற்றம்?? – பிசிசிஐ வட்டாரம் தகவல்

சீனாவுடனான மோதலை தொடர்ந்து இந்தியாவில் சீனாவின் பங்களிப்புகள் குறைத்து கொள்ளப்பட்டு வரும் நிலையில் ஐபிஎல் போட்டிக்கு ஸ்பான்சராக இருந்த சீன நிறுவனம் வெளியேற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த மாதம் லடாக் எல்லையில் சீனா – இந்தியா ராணுவத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் இருதரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டன. அதை தொடர்ந்து சீனா மீதான பொருளாதார நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது. மக்கள் ஒருபக்கம் சீன பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க தொடங்கியுள்ள சூழலில், மத்திய அரசும் சீன செயலிகளை தடை செய்வது, சீனாவுடனான கட்டுமான ஒப்பந்தங்களை ரத்து செய்வது போன்றவற்றில் ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளுக்கு சீன மொபைல் நிறுவனமான விவோ ஸ்பான்சரா இருப்பது குறித்து கேள்விகள் எழுந்தது. பலர் ஐபிஎல் போட்டியின் ஸ்பான்சராக உள்ள விவோவை அதிலிருந்து நீக்க வேண்டும் என கூறி வந்தனர். இந்நிலையில் அரசியல் சூழ்நிலைகள் காரணமாக விவோ நிறுவனம் ஸ்பான்சர் தகுதியிலிருந்து நீக்கப்பட உள்ளதாக பிசிசிஐ வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.