திங்கள், 6 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 4 ஆகஸ்ட் 2020 (09:11 IST)

ஐபிஎல் உறுதியானதால் ஆஸ்திரேலியா-மே.இ.தீவுகள் தொடர் தள்ளிவைப்பு

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி வரும் செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் தொடங்க இருப்பது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே. இதனை அடுத்து ஐபிஎல் போட்டியில் பங்கு கொள்ளும் அனைத்து அணிகளும் பயிற்சிக்காக இம்மாதம் ஐக்கிய அரபு எமிரேட் நாட்டுக்குச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் நவம்பர் 10ஆம் தேதி வரை நடைபெறும் ஐபிஎல் போட்டிகள் ஒவ்வொரு நாளும் இரவு 7 மணிக்கு தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில் ஐபிஎல் தொடர் உறுதியானதை அடுத்து ஆஸ்திரேலியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் நாடுகளுக்கு இடையே வரும் அக்டோபர் மாதம் நடத்த திட்டமிடப்பட்டிருந்த டி20 தொடர் தள்ளி வைக்கப்படுவதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது 
ஐபிஎல் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய இரு நாடுகளின் முக்கிய வீரர்கள் விளையாட உள்ளதால் இந்த மாற்றம் ஏற்பட்டு உள்ளதாகவும், இரு நாடுகளுக்கு இடையிலான டி20 தொடரின் புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது