வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 4 ஆகஸ்ட் 2020 (16:06 IST)

ஐபிஎல் தொடரில் 30 சதவீதம் ரசிகர்களுக்கு அனுமதியா? பிசிசிஐ ஆலோசனை!

துபாயில் நடக்க இருக்கும் ஐபிஎல் தொடரில் 30 சதவீதம் உள்ளூர் ரசிகர்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக பிசிசிஐ ஆலோசனை நடத்திவருவதாக சொல்லப்படுகிறது.

கொரோனா வைரஸ் பரவலை அடுத்து தள்ளிப்போன ஐபிஎல் போட்டிகள் ஒருவழியாக செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் நவம்பர் 8 ஆம் தேதி வரை நடக்க இருப்பதாக பிசிசிஐ கடந்த வாரம் அறிவித்தது. ஐபிஎல் நிர்வாகக் குழு தலைவர் பிரிஜேஷ் பட்டேல் சற்றுமுன் அளித்த பேட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 முதல் ஐபிஎல் போட்டிகள் தொடங்குவதாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடும் விதமாக ஒளிபரப்பு நிறுவனமான ஸ்டார் தொலைக்காட்சி நிறுவனம் நவம்பர் 10 ஆம் தேதி இறுதிப்போட்டி வருமாறு போட்டிகளை நடத்த விரும்புகிறதாம். அதனால் ஐபிஎல் போட்டிகளில் சில மாற்றங்கள் வரலாம் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இன்று நடக்கும் ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர் மாற்றப்பட்ட அட்டவணை வெளியாகும் எனத் தெரிகிறது.

இதையடுத்து மற்றுமொரு முக்கிய செய்தியாக ஐபிஎல் தொடரை பார்க்க 30 சதவீதம் ரசிகர்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக அந்நாட்டு அரசிடம் பிசிசிஐ ஆலோசனை நடத்துவதாக சொல்லப்படுகிறது.