செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 3 ஆகஸ்ட் 2020 (11:43 IST)

ஐபிஎல் போட்டி நேரத்தில் திடீர் மாற்றம்! களை கட்டப்போகும் ஐக்கிய அரபுகள் அமீரகம்!

ஐபிஎல் போட்டித் தொடர்களை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்க இருக்கும் நிலையில் போட்டி நேரத்தில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை அடுத்து தள்ளிப்போன ஐபிஎல் போட்டிகள் ஒருவழியாக செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் நவம்பர் 8 ஆம் தேதி வரை நடக்க இருப்பதாக பிசிசிஐ கடந்த வாரம் அறிவித்தது. ஐபிஎல் நிர்வாகக் குழு தலைவர் பிரிஜேஷ் பட்டேல் சற்றுமுன் அளித்த பேட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 முதல் ஐபிஎல் போட்டிகள் தொடங்குவதாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடும் விதமாக ஒளிபரப்பு நிறுவனமான ஸ்டார் தொலைக்காட்சி நிறுவனம் நவம்பர் 10 ஆம் தேதி இறுதிப்போட்டி வருமாறு போட்டிகளை நடத்த விரும்புகிறதாம். அதனால் ஐபிஎல் போட்டிகளில் சில மாற்றங்கள் வரலாம் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இன்று நடக்கும் ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர் மாற்றப்பட்ட அட்டவணை வெளியாகும் எனத் தெரிகிறது.

இந்நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த ஆலோசனைக் கூட்டத்தில் வழக்கமாக இந்தியாவில் போட்டி தொடங்கும் நேரத்தை விட அரை மணிநேரம் முன்னதாக தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. இந்திய நேரப்படி 7.30 மணிக்கு போட்டிகள் தொடங்க இருக்கிறது. மேலும் இம்முறை வார இறுதி நாளில் செவ்வாய்க் கிழமை இறுதிப் போட்டி நடக்க உள்ளது. எப்போது ஞாயிற்றுக் கிழமையில் இறுதிப் போட்டி நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.