ஞாயிறு, 30 மார்ச் 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வியாழன், 27 மார்ச் 2025 (08:40 IST)

என்னடா இது ரியான் பராக்குக்கு எல்லாம் ரசிகரா?... திட்டமிட்டு செய்யப்படும் PR வேலையா?

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் 22 வயது வீரரான ரியான் பராக் தனது திறமையான அல்ரவுண்ட் பர்ஃபாமன்ஸ் மூலமாக ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். கடந்த சீசனில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலிக்கு அடுத்த இடத்தில் அவர் இருந்தார். அவர் 577 ரன்கள் சேர்த்துள்ளார். இதனால் அவர் மேல் கூடுதல் கவனம் கிடைத்துள்ளது.

இந்நிலையில் இந்த சீசனில் முதல் மூன்று போட்டிகளில் அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் காயம் காரணமாக பேட்ஸ்மேனாக மட்டும் செயல்பட்டு வரும் நிலையில், அந்த போட்டிகளுக்கு ரியான் பராக் கேப்டனாக செயல்படுகிறார். இந்நிலையில் நேற்று கொல்கத்தா அணிக்கு எதிராக நடந்த போட்டியின் போது மைதானத்தில் இருந்து எகிறி குதித்த ரசிகர் ஒருவர் ஓடிவந்து அவர் காலைத் தொட்டு வணங்கினார்.

வழக்கமாக கோலி, தோனி, ரோஹித் ஷர்மா போன்ற ஜாம்பவான் வீரர்களின் வெறித்தனமான ரசிகர்கள் இப்படி உணர்ச்சிவசப்பட்டு செய்வதுண்டு. ஆனால் இளம் வீரரான ரியான் பராக்கிற்கு இப்படி ஒரு ரசிகரா என இந்த சம்பவம் ஆச்சர்யப்படுத்தியது. இதையடுத்துப் பலரும் ரியான் பராக்கின் PR ஏஜென்ஸியின் வேலை இது என சந்தேகத்தை எழுப்பும் விதமாகவும் விமர்சித்து வருகின்றனர்.