செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : செவ்வாய், 5 நவம்பர் 2024 (08:08 IST)

நான்கு சீனியர்களில் இரண்டு பேருக்குக் குறி… பார்டர் கவாஸ்கர் தொடர்தான் கடைசியா?

இந்தியா - நியூசிலாந்து இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இந்தியாவில் நடந்த நிலையில் மூன்று போட்டிகளையும் வென்ற நியுசிலாந்து அணி முதல் முறையாக இந்திய அணியை வொயிட்வாஷ் செய்துள்ளது. இதன் மூலம் கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்ள தொடங்கியுள்ளது இந்திய அணி.

இந்த தொடரை இந்திய அணி இழந்ததற்கு மிக முக்கியக் காரணமாக சீனியர் வீரர்களான கோலி, ரோஹித் ஆகியோரை விமர்சித்து வருகின்றனர் கிரிக்கெட் விமர்சகர்கள். இந்த தொடரில் இருவரும் ஒரே ஒரு அரைசதம் மட்டுமே அடித்தனர். இதனால் அவர்கள் மேல் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் அடுத்து நடக்கவுள்ள பார்டர் கவாஸ்கர் தொடர் முக்கியக் கவனம் பெற்றுள்ளது. இந்திய அணியின் சீனியர் வீரர்களான கோலி, ரோஹித், அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகிய நால்வரில் ஏதேனும் இரண்டு பேருக்கு இது கடைசி தொடராக இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அணிக்குப் புது இரத்தம் பாய்ச்ச பிசிசிஐ இந்த முடிவை எடுக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.