வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : திங்கள், 21 நவம்பர் 2022 (10:01 IST)

கிரிக்கெட் வாரியங்களின் வருமானம்… உச்சத்தில் பிசிசிஐ!

உலகின் மற்ற நாட்டு கிரிக்கெட் வாரியங்களை விட பிசிசிஐ அதிக வருமானம் ஈட்டி நம்பர் 1 கிரிக்கெட் வாரியமாக கடந்த பல ஆண்டுகளாக உள்ளது.

இந்நிலையில் 2021 ஆம் ஆண்டிலும் மற்ற நாட்டு வாரியங்களை விட இந்திய கிரிக்கெட் வாரியம் அதிகம் வருவாய் ஈட்டி முதல் இடத்தில் உள்ளது. பிசிசிஐ 2021 ஆம் ஆண்டில் சுமார்வ 3730 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளதாம். பிசிசிஐ- யின் அதிக வருவாய்க்கு ஐபிஎல் தொடர் ஒரு முக்கியக் காரணமாக உள்ளது. பிசிசிஐக்கு இரண்டாம் இடத்தில் ஆஸி. கிரிக்கெட் வாரியம்,2843 கோடி ரூபாய் வருவாயுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.

அதற்கடுத்த இடங்களில் முறையே இங்கிலாந்து, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளின் கிரிக்கெட் வாரியங்கள் 2135 கோடி ரூபாய், 811 கோடி ரூபாய் மற்றும் 802 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளன.
மற்ற கிரிக்கெட் வாரியங்களின் வருவாய்
  • தென்னாப்பிரிக்கா -485 கோடி ரூபாய்
  • நியுசிலாந்து -210 கோடி ரூபாய்
  • வெஸ்ட் இண்டீஸ் -116 கோடி ரூபாய்
  • ஜிம்பாப்வே -113 கோடி ரூபாய்
  • இலங்கை -100 கோடி ரூபாய்