1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Ajith agarkar may appoint as new selection committee president

புதிதாக அமைய உள்ள கிரிக்கெட் தேர்வுக்குழு… தலைவர் பதவிக்கு முன்னாள் வீரர் போட்டியா?

சேத்தன் சர்மா
இந்திய கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் தேர்வுக்குழுவை மொத்தமாகக் கலைத்தது.

கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணிக்கான வீரர்களை தேர்வு செய்யும் தேர்வுக்குழுவுக்கு சேத்தன் சர்மா தலைமை வகித்து வந்தார். இவர்கள் தேர்வு செய்த அணி இதுவரை கோப்பையை வென்றதில்லை என்பதால் இவர்கள் மேல் விமர்சனம் இருந்தது.

இந்நிலையில் இப்போது சேத்தன் சர்மா உள்ளிட்ட மொத்த தேர்வுக்குழுவும் கலைக்கப்பட்டுள்ளதை ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். இது சம்மந்தமாக இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சியையே வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் புதிதாக அமைக்கப்பட உள்ள தேர்வுக்குழு தலைவருக்கான பதவியில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அஜித் அகார்கர் தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
கோலியின் முக்கிய சாதனையை நேற்றைய போட்டியில் முறியடித்த சூர்யகுமார் யாதவ்!