தொடர்புடைய செய்திகள்
- ஆசியக் கோப்பைத் தொடரில் இவர்கள் இருவரும் இல்லை.. வெளியான லேட்டஸ்ட் தகவல்!
- இதனால்தான் ரிஷப் பண்ட்டுக்கு டெஸ்ட் கேப்டன் பதவி கொடுக்கப்படவில்லையா?... வைரலாகும் தகவல்!
- ஆசியக் கோப்பைக்குத் தயார் நிலையில் பும்ரா?
- ஐபிஎல் தொடரில் அதிரடி ஆட்டம்… ஜிதேஷ் ஷர்மாவுக்கு ஆசியக் கோப்பை தொடரில் வாய்ப்பா?
- ஆசியக் கோப்பை தொடரில் ஜெய்ஸ்வாலுக்கு இடம் இல்லையா?
சிவப்புப் பந்தில் மட்டும் கவனம் செலுத்துங்க… பிசிசிஐ தரப்பிடம் இருந்து ஜெய்ஸ்வாலுக்கு சென்ற அறிவுரை!
ஆசியாவில் கிரிக்கெட் விளையாடும் நாடுகளைக் கொண்டு இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை ஆசியக் கோப்பை தொடர் நடத்தப்பட்டு வருகிறது, இதன் அடுத்த சீசன் செப்டம்பர் மாதம் ஆறாம் தேதி தொடங்கி பத்தொன்பதாம் தேதி வரை நடக்கவுள்ளது. இதற்காக அணிகள் தயாராகி வருகின்றன.
இந்த ஆண்டு ஆசியக் கோப்பை தொடர் டி 20 வடிவில் நடக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. ஏனென்றால் அடுத்த ஆண்டு டி 20 உலகக் கோப்பை தொடர் வருகிறது. இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கவுள்ள இந்த தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி செப்டம்பர் 14 ஆம் தேதி நடக்கவுள்ளது.
இந்த தொடருக்கான் இந்திய அணி ஆகஸ்ட் 19 ஆம் தேதி அறிவிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது. அந்த அணியில் இளம் தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் இடம்பெறமாட்டார் என தெரிகிறது. இதற்குக் காரணம் அணியில் ஏற்கனவே சஞ்சு, அபிஷேக் ஷர்மா மற்றும் ஷுப்மன் கில் ஆகியோர் உள்ளனர். இந்நிலையில் பிசிசிஐ தரப்பு சிவப்பு பந்து போட்டிகளில் மட்டும் இப்போதைக்குக் கவனம் செலுத்தவும் என ஜெய்ஸ்வாலுக்கு தகவல் அனுப்பியுள்ளதாக சொல்லப்படுகிறது.