1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 17 ஜூன் 2024 (15:24 IST)

சூப்பர்-8 சுற்றுக்கு வங்கதேசம் தகுதி...! நேபாளம் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றி..!!

Bangladesh
உலகக்கோப்பை டி20 லீக் போட்டியில் வங்கதேச அணி நேபாளம் அணியை வென்று சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றது.
 
டி20 உலகக் கோப்பையில் கிங்ஸ்டவுனில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் வங்கதேசம், நேபாளம் அணிகள் மோதின. டாஸ் வென்ற நேபாளம் அணி பவுலிங் தேர்வு செய்தது. 
 
முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 106 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. எளிதான இலக்கை விரட்டிய நேபாளம் அணி, 26 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்து திணறியது.

அப்போது ஜோடி சேர்ந்த குஷல் மல்லா(27), டிபேந்திர சிங் (23) ஓரளவு ரன்கள் சேர்த்த நிலையில் மற்ற டெயிலேண்டர்கள் அனைவரும் டக் அவுட்டாக வங்கதேச அணி 21 ரன்களில் எளிதாக வென்று சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றது.