1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 24 அக்டோபர் 2023 (07:35 IST)

“இந்த தோல்வி வலியைக் கொடுக்கிறது…” பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம்!

நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் போட்டி நடைபெற்றது. இதில் பாகிஸ்தானை மிக எளிதாக வென்று வரலாற்று சாதனைப் படைத்தது ஆப்கானிஸ்தான்.

ஏற்கெனவே நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை வீழ்த்தி ஷாக் அளித்த ஆப்கானிஸ்தான், முன்னாள் சாம்பியன் பாகிஸ்தான் அணியையும் சாய்த்து மற்றொரு அதிர்ச்சியை உலக அணிகளுக்கு அளித்துள்ளது.

இந்த போட்டிக்குப் பின்னர் பேசிய பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆசாம் “நாங்கள் சிறப்பாக பேட்டிங் செய்து ஒரு இலக்கை செட் செய்தோம். ஆனால் எங்கள் பந்துவீச்சு சிறப்பாக இல்லை. மிடில் ஓவர்களில் நாங்கள் விக்கெட்களை வீழ்த்தவில்லை. குறிப்பிட்ட லென்த்தில் எங்கள் பவுலர்கள் வீசவில்லை. இந்த தோல்வி மிகுந்த வலி கொடுக்கிறது.

பவுண்டரிகளையும் கோட்டைவிட்டோம். ஆப்கன் அணி, பந்துவீச்சு, பேட்டிங் மற்றும் பீல்டிங் என மூன்று துறையிலும் சிறப்பாக செயல்பட்டது.  இனிவரும் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முயல்வோம்” எனக் கூறியுள்ளார்.