தொடர்புடைய செய்திகள்
- பாபர் அசாம் உலகக்கோப்பையை வென்றால் பாகிஸ்தான் பிரதமர் ஆவார்… கவாஸ்கரின் ஜாலி கமெண்ட்ரி!
- என்னைக் கொல்ல சதி நடக்கிறது - முன்னாள் அதிபர் இம்ரான் கான்
- மீண்டும் வலிமையாகப் போராடுவேன்- முன்னாள் பிரதமர் இம்ரான் கான்
- இம்ரான் கான் மீது துப்பாக்கிச்சூடு: காலில் குண்டு பாய்ந்ததாக தகவல்!
- ரூ.100 கோடி கேட்டு தேர்தல் ஆணையம் மீது வழக்கு தொடரும் இம்ராகான் !
எதிர்காலத்தில் ஐபிஎல் போட்டியில் விளையாடுவீர்களா?... நிரூபரின் கேள்விக்கு பாகிஸ்தான் கேப்டனின் பதில்!
உலகக்கோப்பை தொடரில் இறுதிப் போட்டியில் தோற்று ஏமாற்றத்தை அளித்துள்ளது பாகிஸ்தான் அணி.
சூப்பர் 12 லீக் சுற்றில் முதலில் மோசமாக விளையாடி வந்த பாகிஸ்தான் அணி தென்னாப்பிரிக்காவின் புண்ணியத்தில் அரையிறுதிக்கு தகுதி பெற்றது. அதன் பின்னர் அரையிறுதி போட்டியில் நியுசிலாந்து அணியை எதிர்கொண்ட பாகிஸ்தான் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு சென்றுள்ளது. ஆனால் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியிடம் தோல்வி அடைந்து கோப்பையை இழந்தது.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பத்திரிக்கையாளர் ஒருவர் பாபர் அசாமிடம் “ஐபிஎல் விளையாடி அந்த அனுபவத்தைப் பெற்றால், அணிக்கு பயனுள்ளதாக இருக்கும் என நினைக்கிறீர்களா? எதிர்காலத்தில் ஐபிஎல் விளையாடுவோம் என்ற நம்பிக்கை உள்ளதா?” எனக் கேள்வி எழுப்பினார். ஆனால் அந்த கேள்விக்கு பாபர் அசாம் பதிலளிக்கவில்லை. மேலும் “உலகக்கோப்பை சம்மந்தமான கேள்விகளை மட்டும் கேளுங்கள். ஐபிஎல் பற்றி வேண்டாம்” பாபர் அசாம் சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.